அமைச்சர் அதாவுல்லாவை, எனது சகோதரர் போல கருதுகிறேன் - மஹிந்த ராஜபக்ஷ
எதிர்த்தரப்பிலுள்ள முனாப்பிக்குகள் கூறுவதை (நயவஞ்சகர்கள்) நம்பாதீர்கள். உரிமையுடன் முன்னோக்கிச் செல்ல எனக்கு ஒத்துழையுங்கள். அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதி அங்குள்ள மூவின மதஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அமைச்சர் அதாவுல்லாவை எனது சகோதரர் போல கருதுகிறேன். 2005 ல் கிழக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டேன். புலிகளை ஒழித்து வடக்குடன் சேர்க்காது கிழக்கை தனி மாகாணமாக வைத்திருக்க கோரினார். நாம் அதை அப்படியே செய்து முடித்தோம்.
30 வருட யுத்தத்தினால் பள்ளியில் பாங்கு சொல்ல முடியாதிருந்தது. விவசாயம் செய்ய முடியாது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. 2 மணி நேரத்தில் மத்திய கிழக்கிற்கு செல்ல மத்தள விமான நிலையமுள்ளது. உங்களது பகுதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது என யோசித்து வருகிறேன். மத்தளவுக்கு ரயிலில் செல்லலாம்.
பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகிறது. உங்களது பிரச்சினைகளை அமைச்சர் அதாவுல்லா எமக்கு முன்வைக்கிறார். இக்காலத்தில் நிறைய முனாபிக்குகள் இருக்கிறார்கள். முனாபிக்குகளுக்கு ஏமாறாதீர்கள் இரவு 11.30 மணிக்கு என்னுடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுபக்கம் பாயும் முனாபிக்குகள் இருக்கிறார்கள்.
உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். 30 வருட இருண்ட யுகம் இப்போது கிடையாது. உங்கள் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு முன்னேற்றப்படும். இனவாத அரசியல் வேண்டாம் தவறாக செயற்படாது புத்தியுடன் செயற்படுவோம். வசதியற்ற மக்கள் ஹஜ் செய்ய உதவுவேன் ஏனைய மதத்தினருக்கும் இதேபோன்று செய்வோம்.
that's the reason he was silence while they demolishing the mosques, the truth come out
ReplyDelete