Header Ads



ஐந்து மாகாண சபைகளது அதிகாரம் மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை - லக்ஸ்மன் கிரியெல்ல

(JM.Hafeez)

ந்து மாகாண சபைகளது அதிகாரம் மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதன் காரணமாகவே அவற்றின் கூட்டத் தொடாகள் ஒததிவைக்கப்பட்டள்ளதாக  கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். (2.12.2014) கண்டி தங்கொல்லையில் உள்ள அவரது காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது-

வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், ஊவாமாகாணம், மேல் மாகாணம். கிழக்கு மாகாணம் ஆகிய ஐந்தும் எதிரணி வசம் வரும் நாள் தொலைவில் இல்லை. இதனால்தான் அவற்றின் அமர்வுகளை ஒத்திவைத்துள்ளனர். மலையகத்தைச் சேர்ந்த அதிகமான மாகாண சபை அங்கத்தவர்கள் எம்முடன் இணைய உள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் தனி நபர் ஒருவரிடம் அல்லது ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி இருப்பது ஆபத்தானது. எமது அரசியல் அமைப்பில் 17 வது திருத்தம் அதன் காரணமாகவே கொண்டு வரப்பட்டது. அதாவது சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அரச உயர் பதவிக்கான ஆணையாளர்கள் போன்றவர்களை நியமிப்பது தொடர்பாக பாராளுன்றத்திற்கு பொறுப்புக் கூறும் ஒரு ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால் எமது துர்;ரதிஷ்டம் 18 வது திருத்தத்தின் மூலம் அது ஒழிப்பட்டது மட்டு மல்ல ஒருவரால் எல்லை இல்லாத காலத்திற்கு ஜனாதிபதியாகப் போட்டி யிடலாம் என்ற திருத்தமும்  கொண்டு வரப்பட்டது. 

இதன் விளைவாக ஜனாதிபதி நியமி;க்கும் ஒரு உயர் அதிகாரியை எவராலும் மீள் பரிசீலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இராணுவத்தளபதி, பிரதம நீதியரசர், தேர்தல் ஆணையாளர் போன்ற பல்வேறு பதவிகளைக் குறிப்பிடலாம். இப்படியான உயர் பதவிகளுக்கு நியமிக்கப் படுபவர் அதனை நியமனம் செய்பவருக்னு கடமைப்பட்டவர் ஆகின்றார். இதுவே எமது நாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு, நீதி, நேர்மை போன்ற பல விடயங்கள் இல்லாது ஒழியக் காரணமாகும். அது பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக் கூடியதாக இருப்பின் குறிப்பிட்ட அதிகாரி நியாயமாக நடக்க முடியும். பாராளுமன்றம் பல்வேறு கட்சிகளினது கூட்டாகும். தனிநபர் என்பது அப்படியல்ல. 

அது மட்டு மல்ல் 1978ற்கு முற்பட்ட காலங்களில் நிறைவேற்று அதிகாரம் பிரதமர் தலைமையில் இருந்ததன் காரணமாக பாராளுமன்ற சொற்பொழிவுகளை இறுதிவரை பிரதமர் செவி மடுத்தார். அதே நேரம் உரிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் மூலம் முன்வைக்க முடிந்தது. இன்று நிறைவேற்று அதிகாரம் பொருந்தியவர் பாராளுமன்றத்திற்கு வெளியே தான் இருக்கிறார். இதனால் அவர் அதனை செவி மடுக்கத் தெவையில்லை. ஒருவர் 24 மணி நேரம் உரையாற்றினாலும் அதனை யாரும் கேற்க வேண்டிய அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு இல்லை.

 ஆனால் பிரதமருக்கு அல்லது பாராளுமன்றத்திற்கு பொருப்புக் கூறும் முறை இருப்பின் ஒரு அங்கத்தவரால் வாதாடி தமது கருத்தை வழியுறுத்த முடியும்.  இதன் காரணமாகவே அனேக பாராளுமன்ற அங்கத்தவர்கள் சபைக்கு குறைவாகவே சமூகமளிக்கின்றனர்.

 அரசியல் அமைப்பில் 37 ம் பிரிவின் படி ஜனாதிபதி ஒருவர் எழுத்து மூலம் தமது அதிகாரங்களை பிரதமருக்கு வழங்க முடியும். அல்லது தேவையான ஒரு சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை பிரதமருக்கு வழங்க முடியும். ஜாதிக ஹெல உருமையின் வாதமும் அதுதான். பாதுகாப்பு தொடர்பான அதிகாரம் தவிர்ந்த ஏனைய வற்றைப் பிரதமருக்கு வழங்க வேண்டும் என்பதாகும். எனவே நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவது ஒரு பெரிய காரியமல்ல.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது அபேட்சகர் வெற்றி பெற்றால் தற்போது அரச தரப்பில் உள்ள பலர் எம்முடன் ஓடோடி வந்து இணைந்து கொள்வர். அவர்களத உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவோம். அல்லது ஜனாதிபதிக்குள்ள அதிகார்ததின் கீழ் 100 நாட்களின் பின் பாராளுமன்றத்தைக் களைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம். எப்படியோ பொது அபேட்சகர் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திற்குக் கிடைக்கும் எனவே பொதுமக்களாகிய நீங்கள் நிறைவேற்று அதிகாரத்தை தனி ஒருவரிடம் வைத்திருப்பதா? ஆல்லது 225 பேர்களைக் கொண்ட பாராளு மன்றத்திற்கு வழங்குவதா என்று முடிவு செய்யுங்கள்.

பொது வேட்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்று பலர் கேட்கின்றனர். அது மேற்சொன்ன விடயங்கள் தான் ஒப்பந்தத்தில் அடங்கி  உள்ளன. நான் 24 மணித்தியாலங்கள பாராளுமன்றத்தில்  உரையாற்றினாலும் அதனை முழுமையாக நிராகரிக்க முடியும். பிரதமருக்கு நிரைவேற்று அதிகாரம் வழங்கப் படுமாயின் நான் பிரதி நிதித்துவப் படுத்தும் கட்சியும் என்னுடன் சேர்ந்து குறிப்பிட்ட விடயத்திற்கு வாதாடுவதனால் பிரதமர் அதனை நிராகரிக்க முடியாது. தற்பொது அப்படி அல்ல. ஜனாதிபதிக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. இது எனது 26 வருட பாராளுமன்ற விவகாரங்கள் மூலம் தெரிந்து கொண்டவையாகும்.

மைந்திரிப்பால சிரிசேனா அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் காரணமாக அரச தரப்பினர் நிலைகுழைந்து போயினர். அவர்கள் பொது வேட்பாளராக ரனில் விக்கரமசிங்க வருவார் என்று நினைத்து பல கோடிகள் செலவிட்டு குறுந்திரைப்படங்களும் சேறு வீசும் சுவரொட்டிகளும் தயாரித்தனர். பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டி இடுவார் என நினைத்து அதற்கான சேறு வீசும் ஏற்பாடுகளைச் செய்தனர். அதன் பிறகு சோபித தேரர் வருவார் என எதிர்பாhத்து அதற்கு ஆயத்தமாகினர். அதன்பிறகு கருஜயசூரியவின் பெயர் அடிபடவே அவருக்கு எதிராக தயாராகினர். அதனை அடுத்து சிராணி பண்டாரநாயக்க வருவார் எனக்கருதி அதற்குத் தயாராகினர். இறுதியில் அவர்களது கட்சியின்  பொதுச் செயலாளரே வந்த போது அவர்களது திட்டங்களும் தயாரித்த ஆவணங்களும்  மண்ணோடு மண்ணாகிவிட்டன. அவர்கள் மிகச் சிறந்த புலனாய்வுப்படையை வைத்துள்ளதாகக் கூறினாலும் இதனை அவர்களால் கண்டு பிடிக்க முடியாது போனது. நாட்டின் புலனாய்வுத்துறை நலிவடைந்த நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது .

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களில் சுமார் 30 முதல் 40 சதவீதத்தினர் எஸ்.டப்.ஆர்.டி. பண்டாரநாயக்காவிற்கு மரியாதை செலுத்துவபர்கள். மைந்திரிப்பால சிரிசேனாவின் கட்சி மாற்றத்துடன் அவர்களில் பெரும்பான்மையானவர்களும் பண்டாரநாயக்காவின் மரியாதை நிமித்தம் எதிரணிக்கு வந்து விட்டனர். 

எனது வீட்டிற்கு தினமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் 40 – 50 பேர்வரை வருகின்றனர். நான் ஸ்ரீ ல.சு.க. யில் அங்கத்தவராக இருந்தவன். அவர்களை நன்கு தெரியும். இது அரச தரப்பில் வாக்கு வங்கி வீச்சியைக் காட்டுகிறது. சீனாவில் ஒருவகைத் தண்டனை வழங்குவார்கள். சிங்களத்தில் 'தசவதய' என்று கூறுவதாகும். அதாவது பத்துவிதமான கொடூரம் என்பது கருத்ததாகும். இதே போல் அரச தரபபில் இருந்து அனைவரும் ஒரே நேரத்தில் வர மாட்டார்கள். படிப்படியாக வந்த வண்ணம் இருப்பர். அரச தரப்பிற்கு அது தசவதயாக இருக்கும்.

அரச தரப்பினர் எம்மைப் பார்த்து டயஸ்போராவின் (புலம் பெயர்ந்தவர்னது) பணமே எம்மை ஆடிப்படைப்பதாகக் கூறுகின்றனர். டயஸ்போராவின் முழுப்பணமும் எஞ்சியுள்ள ஒரே ஒரு புலி உறுப்பினரான கே.பி.என்றழைக்கப் படும் குமரன் பத்மநாதனிடமே உண்டு. அவருக்கு அரசு பாதகாப்பு வழங்குகிறது.பிரித்தானியாவில் புலித்தடை நீக்கம் செய்யப்பட்ட போது அரசு மௌனம் சாதித்தது. காரணமம் சிறைப்பட்டுள்ள புலிகளின் பணத்தை கே.பி. மூலம் வெளிக் கொணர்வதற்காகும். எனவே டயஸ்போராவின் பணம் அரச தரப்பில்தான் உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் புலிகளின் பணம் 200கோடி அமெரிக்க டொலர்களையும் கே.பி. மூலம் அரசு கைப்பற்ற உள்ளது .
ஊடகங்களும் கே.பி. தொடர்பான விடயத்தை மறைத்து வருகிறது. இது அரசின் திட்டங்களில் ஒன்று. எனவே அதனை ஊடகங்கள் வெளிக் கொணர வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.