Header Ads



மைத்திரிக்கு ஆதரவு என்ற மு.கா. அறிவிப்பு செவ்வாய்கிழமை..? பஸீர், மன்சூர் எதிர்ப்பு..??



ஜனாதிபதி தேர்தலுக்கான மனுத் தாக்கல் திங்கட்கிழமை, 8 ஆம் திகதி நிறைவடைந்தவுடன், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்துவமிக்க அதியுயர் பீடக்கூட்டம் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கட்சியின் முக்கிய பதவியிலிருக்கும், அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சற்றுமுன் கூறினார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 90 சதவீதமானவர்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதுவே முஸ்லிம் சமூகத்தினதும் விருப்பம் எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கோடிட்டுக் காட்டினார்.

கூடவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் மைத்திரிக்கு ஆதரவு என்ற இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதுடன், தமது கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் ஒத்துக்கொண்டார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிப்பது என்ற முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் ஆகியோர் உடன்பட மறுத்துவருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் அந்த முக்கியஸ்தர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

1 comment:

  1. மய்திரியும் சிறு பான்மை மக்களுக்கு எதுவும் செய்வதாக காணவில்லை நிரவேட்டு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒலித்தால் சிருபான்மைகுத்தான் சேதம் அதிகம் என்பதை உணராமல் மைதிரிக்கு நிபந்தனை இல்லாமல் அதரவு செய்வது மகா தவறு. இந்த இரண்டு சிறு பான்மை மக்களும் இணைந்து தனியாக கேட்டால் ஜனாதிபதியை தீர்மானிக்கும் அதிகாரம் நமக்குள் வரும் அந்நேரம் எல்லாம் கை கூடும் இல்லை என்றால் குரங்கு அப்பம் நிறுத்த கதைதான்

    ReplyDelete

Powered by Blogger.