நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது, தினமும் அலரி மாளிகைக்கு அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டது
சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாடுகள் அலரி மாளிகையிலிருந்தே முன்னெடுக்கப்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
சுகாதார அமைச்சை கையளித்தால் அதனை சரியான நடைமுறைப்படுத்த முடியாதா என ஜனாதிபதி அண்மையில் எங்கோ ஒரு கூட்டத்தில் கூறியதாக நினைவு இருக்கிறது.
ஆனால் அந்த சுகாதார அமைச்சின் நிர்வாகம் அலரி மாளிகையில் இருந்தே செயற்படுத்தப்பட்டதாக நான் பொதுமக்கள் முன்பாக பகிரங்கமாக கூற விரும்புகிறேன்.
அமைச்சில் எனக்கு தேவையான ஒரு செயலாளரை நியமிக்க வேணும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
தினமும் காலையில் அலரி மாளிகைக்கு அழைத்து அங்கு வைத்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அமைச்சரின் ஆலோசனைப்படியன்றி, ஜனாதிபதியின் ஆலோசனைப்படியே செயற்படவேண்டும் என அந்த செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த கால சுகாதாரத்துறையில் ஏற்பட்ட பற்றாக்குறைகளைக் கூட அவர்களால் நிவர்த்தி செய்ய முடியாத நேரத்தில் நான் சமயோசிதமான வான்படையின் உதவியுடன் இந்தியாவில் இருந்து 'சேலனை' இறக்குமதி செய்தேன்.
Post a Comment