Header Ads



மைத்திரியின் ஆடை குறித்து, நாமலின் 'குத்தல்' பேச்சு...!


நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எவ்வாறு இரத்து செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நிகழ்வொன்றில் கேள்வி எழுப்பினார்.

உடுநுவர பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ஸ, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் மாகாண சபை உறுப்பினர் சுசார தினால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஸ தெரிவித்ததாவது;

நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய முடியுமா? அரசியலமைப்பை வரைவதற்கு அதை விட காலம் சென்றுவிடும். நாட்டு மக்களை முழுமையாக நிர்கதிக்குள்ளாக்கி, அவர்களுக்குக் கிடைக்கின்றவற்றை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். தற்போது ஆடைகளுக்கும் புதிய புதிய துண்டுகளைப் போட்டுக்கொள்கின்றனர். அது தேசிய ஆடை இல்லை. அதற்கு என்ன பெயர் கூறுவது என்று கூட எனக்குத் தெரியாது. எமக்கு அது குறித்து பிரச்சினை இல்லை. அவர்களின் விருப்பம் அது. அரசியலில் ஈடுபடுவீர்கள் என்றால், கொள்கையுடன் வாருங்கள். நாட்டின் இளைஞர்களது எதிர்காலம் குறித்துக் கதையுங்கள். நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்துக் கதையுங்கள்

No comments

Powered by Blogger.