Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை மஹிந்தவும், மைத்திரியும் நிராகரித்தார்களா..?

-Gtn-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனி மாவட்டக் கோரிக்கையை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என தனியானர் ஒர் நிர்வாக மாவட்ட அலகினை உருவாக்கித் தந்தால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்மசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும், முஸ்லிம் காங்கிரஸூடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. கண்டிப்பாக கிடைக்காது என்று தெரிந்தும் இதுபோன்ற விடயங்களை ஏன் முன்வைக்கின்றார்கள் என்பது புரியவில்லை. தனிமாவட்ட அலகு என்பது இலங்கையை இரண்டு துண்டுகளாக பிரிப்பாதாகவே அவர்கள் மக்களிடையில் உணரவைத்துள்ளார்கள். தனி நாடு கேட்பதாகவே கருதுகின்றார்கள் எனும்போது ஏன் இப்படியோரு தலைப்பின் கீழ் இதைக்கேட்கவேண்டும் என்பது எமது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.