பாடசாலைக்கு செல்ல சோம்பேறியான சிறுவன், ஜனாதிபதியுடன் சந்திப்பு (படம் இணைப்பு)
"நான் உங்களைப் போல் வர ஆசைப்படுகின்றேன்" என்று கொழும்பு கிரான்ஸ்பாஸ் பகுதியில் சிறுவன் ஒருவன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் மத்திய கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொண்டார். அதில் பலாமரச் சந்தியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி வாழ்க என்று வாழ்த்திக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டு தனக்கு அருகில் அழைத்து பேசியுள்ளார்.
ஜனாதிபதி மகனின் பெயர் என்ன?
சிறுவன் தினுஷ லக்ஷான்
ஜனாதிபதி மகன் பாடசாலை செல்கின்றீர்களா? எங்கு இருக்கின்றீர்கள்?
சிறுவன் எனக்கு பாடசாலை செல்ல சற்று சோம்பேறியாகவுள்ளது. கிரான்பாஸ் பகுதியில் வீடு உள்ளது
ஜனாதிபதி அப்படி முடியாது. நன்றாக படிக்கவேண்டும். மகன் பெரியவராக வந்ததும் யார் போன்று வர விருப்பம்
சிறுவன் உங்கள் போன்று வர விருப்பம்
ஜனாதிபதி என்னைப் போன்று வரவேண்டுமாயின் நன்றாக படிக்கவேண்டும். நன்றாக படிப்பீர்களா?
சிறுவன் ஆம்.
Post a Comment