கட்சியில் சிலர் மேற்கொள்ளும் தீரமானங்களால், நாங்கள் விரக்தியுடன் வருத்தமடைகிறோம் - டிலான் பெரேரா
அண்மைக்காலமாக இடம்பெறும் கட்சி மாறல்களின் பின்னணியில் அமானுஸ்ய சக்திகள் செயற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கட்சியில் சிலர் மேற்கொள்ளும் தீரமானங்களால் அரசியல்வாதிகள் என்றவகையில் நாங்கள் விரக்தியுடன் வருத்தமடைகிறோம். ஆனால், பதிலுக்கு பதில் அரசியல் நகர்த்தல்களை மேற்கொள்ளும் போது பொதுமக்களின் மனங்களில் நிலைபெற முடியும்.
மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு சென்றார்இ திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் கட்சிக்கு வந்தார். எனவே செயலாளருக்கு பதில் செயலாளர் மாறிவிட்டார் என்று மக்கள் தங்களுக்கு எண்ணங்களை வரைந்து கொள்வார்கள்.
இதன்காரணமாகவே அமானுஸ்ய சக்தியுடன் அரசியலில் ஈடுபடும் போதே மக்களின் மனங்களில் இடம்பெற கூடியதாகவுள்ள என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துவிடுமா என செய்தியாளரகள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அமைப்பர் டிலான் பெரேரா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிச்சயமாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டார்கள்.
ஆனால் அந்த தீர்மானத்தை வெளியிடாமல் இருப்பது ஏன்?.
பொது வேட்பாளர் ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேனவாக இருந்தார்.
பின்னர் மைத்திரிபால குமாரணதுங்கவாகினார்.
அடுத்து மைத்திரிபால விக்கிரமசிங்கவாகினார்.
தொடர்ந்து மைத்திரிபால பொன்சேகாவாக முயற்சித்து கொண்டிருக்கிறார்.
அவரை பொதுவான வேட்பாளராக வேண்டும் என அழைத்தவர்கள் யாருக்குமேஇ யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது தெரியாது.
Post a Comment