Header Ads



'செல்பி' பைத்தியங்கள்..!

அமெரிக்காவில் செல்ஃபி மோகத்தால் முகத்தில் அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செல்போன்களின் மூலம் தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் செல்ஃபி முறை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. செல்ஃபி எடுத்துக் கொள்வதென்பது இப்போது பேஷனாகி வருகிறது. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உலகின் மிகப்பெரிய செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் மயான காவலாளி ஒருவர் அவரது அம்மாவை புதைத்த இடத்தை தோண்டி செல்ஃபி எடுத்துள்ளார். ஒருவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். 

உலகம் முழுவதும் செல்ஃபி மோகம் அதிகமாகக் காணப்படுகிறது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொண்டது போக, தற்போது கும்பலாக சேர்ந்து குரூப்பி என்ற பெயரிலும் மக்கள் புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். செல்ஃபி மூலம் எடுக்கப்படும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்கின்றனர். அதற்காக தங்கள் முகம் மிகவும் அழகாகவும், பிரகாசமாகம் இருக்க விரும்புகின்றனர். எனவே, தங்களின் முகத்தில் மூக்கு, கண் இமை உள்ளிட்ட இடங்களிலும், முக சுருக்கங்களை நீக்கவும் முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். 

No comments

Powered by Blogger.