சரத் பொன்சேகாவின் மருமகனுக்கு, பிணை வழங்கப்பட்டதன் பின்னணி - அரசியலில் பரபரப்பு
-Gtn-
ஹைகோர்ப் இராணுவ உபகரண மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டிருந்த தானுன திலக்கரட்னவிற்கு இன்றைய தினம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தானுன திலக்கரட்ன, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மருமகன் (புதல்வியின் கணவர்) என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயுதக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்ட போது தானுன மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்குத் தொடரப்பட்டதனைத் தொடர்ந்து தானுன மிக நீண்ட காலகமாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பாரியளவில் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டதாக அரசாங்கத்தினால் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜராகிய சில நிமிடங்களில் பிணை வழங்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் கிரிக்கட் வீரர் ஹசான் திலகரட்னவின் மிக நெருங்கிய உறவினரே தானுன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் தானுன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தேர்தலில் ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தானுன திலகரட்ன சரத் பொன்சேகாவின் மகளுடன் பேணி வந்த திருமண பந்தத்தை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் முறித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் ஆஜராகிய காரணத்தினால் விரைவில் சட்ட ரீதியாக விவாகரத்து கோரி இருவரும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் பொன்சேகா கைது செய்பய்பட்டது முதல் தானுன தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டு நீண்ட காலம் தலைமறைவாக வாழ்ந்து வரும் நபர் ஒருவருக்கு நீதிமன்றம் எந்த அடிப்படையில் உடனடியாக பிணை வழங்கியது என சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரான தானுனவிற்கு நான்கு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் 50 லட்ச ரூபா இரண்டு சரீர பிணை அடிப்படையில், நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
Post a Comment