றிசாத் பதியுதீன் மைத்திரிக்கு ஆதரவளிக்க முன்வந்தால், முழுமனதுடன் வரவேற்பேன் - ஹுனைஸ் பாருக்
அமைச்சர் றிசாத் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் தாம், அதனை முழுமனதுடன், மனசார வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
முஸ்லிம்கள் நலனில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு முழு அளவில் அக்கறை இருக்குமானால் அவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். இலங்கை மற்றும் மன்னார், முசலி பிரதேச முஸ்லிம்களின் தற்போதைய நிலைப்பாட்டை அமைச்சர் றிசாத் நன்கு புரிந்துவைத்திருப்பார் என்று நம்புகிறேன்.
முஸ்லிம்கள் மைத்திபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதை றிசாத் பதியுதீன் புரிந்திருக்கும் நிலையில், மைத்திபால சிறிசேன தரப்புடன் றிசாத் பதியுதீன், இணைவது குறித்தோ அல்லது ஆதரவளிப்பது பற்றியோ சில முன்னெடுப்புக்கள் நடைபெறுவதாக அறிகிறேன். நாகரீகமான, இஸ்லாம் விரும்பும் பண்புகளுடன் அரசியல் செய்பவன் என்ற வகையில் இதனை வரவேற்பதாகவும் ஹுனைஸ் பாருக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மைத்திரிபாலவினால் வெளியிடப்படவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து, தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment