வெற்றி பெறவைக்கும் வாக்குகள் தொடர்பில், எனக்கு சிறந்த அனுபவம் உள்ளது - மைத்திரி
அரசாங்கத்தின் தேர்தல் கட்டமைப்பு இன்று வீழ்ச்சி கண்டுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி – வதுரப பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து தோல்வியில் வைத்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய்து அரசாங்கத்தை அமைத்து தாம் எதிர்கட்சிக்கு வந்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
எனவே வெற்றி பெற வைக்கும் வாக்குகள் தொடர்பில் தமக்கு சிறந்த அனுபவம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிக்க குமாரதுங்க, ஜாதிக ஹெல உறுமய என்ற சக்திமிக்க தலைமைகளை ஒன்றிணைத்து இலங்கையில் முதற்தடவையாக வலுமிக்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Post a Comment