Header Ads



தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த மேடையிலும் ஏறமாட்டேன், பஸிலின் கோரிக்கையை ஏற்கமுடியாது - மேர்வின்

-Gtn-

களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக அடிப்படையில் தாம் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களனி தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சாலித விஜேசூரிய கடமையாற்றுவார் என மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.

கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எந்தவொரு மேடையிலும் ஏறப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை சிசிர ஜயகொடி மற்றும் பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர ஆகியோருடன் இணைந்து செயற்படுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாகவே மேர்வின் சில்வா எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு எதிர்க்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராகவும் கட்சி தொடர்பிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவராகவும் மேர்வின் சில்வா மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.