நிட்டம்புவயில் கிளைமோர் குண்டுகள் மீட்பு, மைத்திரிபால சிறிசேன இலக்கு வைக்கப்பட்டாரா..?
(Tw)
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது வேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கம்பஹா நகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.
அவரது மாமியாரின் இறுதிக் கிரியைகள் நேற்று வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெறவிருந்த காரணத்தினால், கூட்டம் பிற்போடப்பட்டது.
நிட்டம்புவ, தெபஹெர மாயானத்தில் மாலை நேரத்தில் மாடுகளை கட்ட சென்ற ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே அங்கிருந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டன.
குறித்த நபர் தினமும் அந்த மயானப் பகுதியில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். எவ்வாறாயினும் மீட்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டன.
Post a Comment