Header Ads



இஸ்லாமிய தேச தலைவர் அபூபக்கர் பக்தாதியின் மனைவி, மகன் கைது..?

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் மனைவி மற் றும் மகனை சிரிய எல்லையில் வைத்து கைது செய்ததாக லெபனான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பெயர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத இந்த இருவரும் 10 தினங்களுக்கு முன் லெபனானுக்குள் நுழைந்ததை அடுத்து இராணுவ உளவுப் பிரிவினரிடம் பிடிபட்டுள்ளனர். லெபனான் பாதுகாப்பு அமைச்சினால் பாக்தாதியின் மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட் டின் அல் சபீர் பத்திரிகை செய்தி வெளியிட் டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான நிலப் பகுதியை கைப்பற்றி கடந்த ஜ{னில் கிளாபத்தை பிரகடனம் செய்த ஐ.எஸ். குழு பக்தாதியை கலீபாவாக அறி வித்தது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மொசூல் நகருக்கு அருகில் நடத்திய வான் தாக்குதலில் பக்தாதி கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக வெளியான செய்தியை ஐ.எஸ். குழு கடந்த மாதம் நிராகரித்திருந்தது. பக்தாதி அண்மையில் வெளியிட்ட ஓடியோ பதிவில், கிளாபத் விரிவு படுத்தப்படுவதாகவும் எரிமலை ஜpஹாத் ஒன்றுக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

வெளிநாட்டு உளவு பிரிவுகளுடன் இணைந்து முக்கியமானவர்கள் பிடிக்கப் பட்டதாக பக்தாதியின் மனைவி, மகனின் கைது நடவடிக்கையை லெபனான் பாதுகாப்பு படையினர் விபரித்துள்ளனர். இந்த இருவரும் சிரியாவில் இருந்து போலி ஆவணங்களுட னேயே லெபனானுக்கு வந்துள்ளனர்.

இந்த இருவரும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு அருகில் இருக்கும் மலைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அல் சபீர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை இராணுவம் கடந்த ஒருசில தினங்களாக இரகசியமாக வைத்திருந்ததாக அந்த பத்திரிகை மேலும் விபரித்துள்ளது.

பக்தாதிக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் முடி அலங்கார நிபுணரான சஜh ஹமீத் அல் துலைமி என்பவர் அவரது ஒரு மனைவி என்று உள்ளுர் ஊடகங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

லெபனானில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அண்மைக்காலத்தில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். சிரிய எல்லையை கடந்து வருபவர்கள் குறித்தும் அந்நாட்டு உளவுப் பிரி வினர் கண்காணிப்புடன் செயற்படுகின்றனர்.

ஐ.எஸ். போராட்டத்தை நாட்டுக்குள் பரப்பும் முயற்சியாக தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் லெபனான் பாதுகாப்பு படையினர் அண்மைய தினங்களில் பலரையும் கைதுசெய்தனர்.

6 comments:

  1. WOW very good continue....

    ReplyDelete
  2. Dear Karan don't know about the inside of this message, pelase quit from this kind of message and we will look into this

    ReplyDelete
  3. Dear Abu Kalith, how can you say kalith is terrorist, in the point view of British empire, Gnathi was a terrorist during the colonial India, Please do not forgot the history of our culture and who created this war against to Muslims

    ReplyDelete
  4. ha ha ha ha .....wait and see

    ReplyDelete
  5. True....We shouldn't try to judge based on images which provided by western medias about ISIS.....America and European Crusaders launched another war against to Muslim Countries......What we did before pointing ISIS and other Muslim Movements.

    ReplyDelete
  6. MYM Jiffry, அல்லாஹ்வினதும் இஸ்லாத்தினதும் பெயரைச் சொல்லி எந்த விதமான பஞ்சமா பாதகங்களை செய்யலாமா, இறைவனையும் அவன் வழிமுறைகளையும் நம்பாமல், கொலையினையும் கொலைக் கருவியினையும் நம்பும் ஒருவருக்கு வக்காலத்து வாங்காதீர்கள். யுத்த களத்தில் ஆயிரம் எதிரிகளை கொன்றால் அது வீரம், அதே எதிரி சரணடந்த பின்பும் கொத்து கொத்தாக எந்த விசாரணையும் இல்லாமல் கொன்றால் அதன் பெயர் இஸ்லாமா? பணயக் கைதிகளை இப்படி நடத்த தான் இஸ்லாம் சொல்லுகிறதா?

    ReplyDelete

Powered by Blogger.