Header Ads



இந்த அரசாங்கம் ஓர் கொள்ளைக் கூட்டம் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

 பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அநேக பகுதிகளிலும் கட்அவுட்கள் அடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளார். நாடு முழுதிலும் கட்அவுட் அடித்து மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது.

இந்த கட்அவுட் அடிக்கும் நபர்கள் கூட ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. எந்த நாளும் மக்களை ஏமாற்ற முடியாது.

இந்த அரசாங்கம் ஓர் கொள்ளைக் கூட்டம் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாடு சீரழிந்துள்ளது. பொலிஸார் சுயாதீனமான முறையில் கடமைகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் பாரியளவில் பின்னடைந்துள்ளது. ராஜபக்ச குடும்பம் ராஜ வாழ்க்கை வாழ்கின்றது. ராஜபக்ச குடும்பமே ஊழல் மோசடி செய்பவர்களை பாதுகாக்கின்றது.

இன்னமும் கொஞ்ச காலத்திற்கு ராஜபக்சக்கள் ஆட்சி நடத்தினால் நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்கும் என அஜித் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.