Header Ads



சார்ஜ் ஏற்றும் போது, செல்போன் வெடித்து வாலிபர் பலி

(India)

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது என்ற அர்த்தமுள்ள பொன்மொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி தீர்ந்துப்போனதால், வீட்டில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் சார்ஜரை பொருத்தி சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தார். 

அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்காமலேயே காதில் வைத்து பேசத்தொடங்கினார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜுலால் குஜாரின் காதில் இருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. 

இதில், கை மற்றும் மார்பு பகுதியில் தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். ஆனால், மின் அதிர்ச்சி மற்றும் தீக்காயம் காரணமாக வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

அவரது பிரேதத்தை கைப்பறி மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நைன்வா நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.