பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர்' என கூறி பொலிஸாரை தாக்கமுயன்றவர் சுட்டுக் கொலை
பிரான்ஸில் கத்தியுடன் "அல்லாஹ{ அக்பர்" என கூச்சலிட்டுக்கொண்டு பொலிஸாரை தாக்கியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபரின் தாக்குதலில் மத்திய பிரான்ஸில் மூன்று பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பிரூன்டி நாட்டில் பிறந்த பிரான்ஸ் பிரiஜயான இந்த நபர் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் பதிவானவராவார். தீவிரவாத எதிர்ப்பு புலன் விசாரணையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதல்தாரியிடம் நீண்ட கத்தியொன்று இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
"அந்த நபர் கதவை இடித்துக்கொண்டிருந்தார். எனவே அதிகாரிகள் கதவை திறந்து அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முயன்றனர். அப்போது அந்த நபர் எமது சகாக்கள் மீது உடனடியாக பாய்ந்து கத்திக்குத்து நடத்தினார்.
ஒரு அதிகாரியின் கையிலும் மற்றொருவரின் கழுத்திலும் இன்னுமொருவரின்; முகத்தின் மீதும் கத்திக் குத்து நடத்தினார்" என்று கிறிஸ்டோபர் கப்பின் என்ற பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கராவதம் இருக்கிறதா என விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Post a Comment