மஹிந்தவுக்கு தொடர்ந்து ஆதரளிப்போம், றிசாத் எம்முடன் கலந்துரையாடவில்லை - ஹிஸ்புல்லா
தாம் அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்படுகின்ற போதிலும், தம்முடன் கலந்தாலோசிக்காமலேயே றிசாத் பதியுதீன், மைத்திரிபாலவுக்கு ஆதரவு என்ற திர்மானத்தை மேற்கொண்டுள்ள போதிலும் தாம் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரிக்கப்போவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எனது முந்திய தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆம், நான் மஹிந்த ராஜபக்ஸவையே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பேன். காத்தான்குடி நகரசபையும் அவ்வாறே செயற்படும். றிசாத் பதியுதீன் தனி நபராக நின்று இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். கட்சியின் பல் முக்கியஸ்தர்களிடம் கூறாமலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
Post a Comment