Header Ads



''மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுவிட்டால்'' விமல் வீரவன்சவின் கவலை

-Vi-

எதிரணியில் கட் அவுட்டுகள் அடிப்பதற்கு ஆட்கள் இல்லை. தமது இயலாமையை காட்டி கொள்ளாமல் இருப்பதற்கே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான  விமல்  வீரவன்ச, ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று விட்டால் யாருக்கு அதிகாரம் என்பதில் குழப்பநிலை ஏற்படும். ஒரு கடையில் மூன்று முதலாளிகள் இருக்க முடியுமா? அது போன்று தான் இவர்கள் அமைக்கும் ஆட்சியும் இருக்க போகின்றது. கடைக்கு உரிமையாளராக மைத்திரிபால சிறிசேன இருந்தால் முதலாளிகளாக சந்திரக்காவும், ரணிலும் இருப்பார்கள். எவ்வாறாயினும் கடையின் பணம் வாங்கும்; இடத்தில் (கேஷ் கவுன்டர்) சந்திரிக்கா இருப்பார். ஆனால் இந்த கடையால் பொது மக்களே தீர்மானம் எடுக்க முடியாமல் திண்டாட போகின்றனர். எனவே நல்ல ஒரு தீர்மானத்தை எடுக்க வேணடும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஓரங்கட்டப்படும் சஜித்
சஜித்த பிரேமதாசவை சந்திரிக்கா திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டி வருகின்றார். அவர்கள் அரசியல் பயணம் ஆரம்பமாகி இரு வாரங்கள் முடியவில்லை. அதற்குள் ஓரங்கட்டல் இடம்பெற்று வருகின்றன. மேலும் சந்திரிக்கா தனது நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்காக ரணில் விக்கிரம சிங்கவை பகடைகாயாக வைத்துள்ளார்.

உடன்படிக்கைகள் 
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க மற்றும் ஹெல உறுமய ஆகியோருடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டனர். ஹெல உறுமயவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் ஒற்றை ஆட்சி குறித்த பேசப்பட்டுள்ளது. இதில் ஹெல உறுமய 100 நாட்களுக்கு மாத்திரம் தான் பொறுப்பு கூறுமாம். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன கட்டாயம் ரணில் விக்கிரம சிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்க வேண்டும். அவ்வாறு உடன்படிக்கை ஒன்றை செய்யாமல் ரணில் விக்கிரம சிங்க தனது கட்சியின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கு பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார். எனவே மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்துககொண்ட உடன்படிக்கை தொடர்பில் மக்களும் வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த தேர்தலில்
2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பொதுமக்களை வைத்துகொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனால் தற்போது மைத்திரிபால சிறிசேன ஊடகங்களை வைத்துகொண்டு அழுதுகொண்டும், பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டும் இருக்கின்றனர்.

 இரு தலைகளை கொண்ட ஒரு மிருகம்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் 100 நாட்களுக்கு பின்னர் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படும் என்கின்றனர். சிலர் பிரதமருக்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்கின்றனர். இது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகும். அதாவது இரு தலைகளை கொண்ட ஒரு மிருகமாகவே இவர்கள் இருக்க போகின்றனர்.

 கூட்டமைப்புடன் சந்திரிக்கா உடன்படிக்கை
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு வழங்குவது என்பதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருப்பதை பார்த்தால் சந்திரிக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். எனவே செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு இவர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

புலிகளுக்கு உதவிய சந்திரிக்கா, ரணில்
நாட்டை இரண்டாக பிளவுப்படுத்த ரணில் விக்கிரம சிங்க புலிகளும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். சுனாமியை சாதகமாக வைத்து சந்திரிக்கா புலிகளுக்கு நிவாரணங்களையும், பல உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில் மீண்டும் நாட்டை பாதாளத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர். எனவே மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரக்கா ஆகியோரின் கூட்டு தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

லிபியாவில் நடப்பது என்ன
லிபியாவில் ஜனநாயகம் இல்லை என்று கடாபியை கொன்றனர். ஆனால் கடாபி இருந்த போது இருந்தஜனநாயகமும் இப்போது இல்லாமல் போய்விட்டது. மரணங்களும் கொலை கொள்ளைகளுமே தற்போது இடம்பெறுகின்றன. மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால் இலங்கையிலும் இந்நிலைமை ஏற்படும்.


1 comment:

  1. who did teach you to speak such great lie... ? may be you president Mahinda....

    ReplyDelete

Powered by Blogger.