''நமது பாராம்பரியப், பாதுகாப்பிற்கான தேர்வு''
(Mohamed inham)
இது உலகம். படைக்கும் போதே உருளை நீ உருட்ட வேண்டியதில்லை. கொல்லுவது நியாயப்படும் போது சாவுக்குப் பயப்படக் கூடாது. கொள்கையில் நிலைப்படும் போதுளூ சின்னத்தில் தரிபடக் கூடாது போ!.......நீயென்ன இலையா? மரமா? குதிரையா? யானையா? உன் எண்ணத்திலென்ன அன்னமா? நீ முஸ்லீமல்லவா? நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நபி இப்றாஹீம் வைத்தபெயர் உனக்கு.
என் கவிதையைப்படி!........இன்றுனக்கு எதிர்காலமாகத் தெரிவதுஇ நாளை மறுநாள் உனக்கு இறைந்தகாலமே. கவனமாக நடந்துகொள்ளூ காலம் ஒன்றுதான் - அது என்றைக்கும் ஏகமானது, ஏமாற்றங்கள் உன் எதிர்பார்ப்பிற்குத்தான்.
ஒரு நாளில்ளூ நவ துவாரங்கள் அடைக்கப்பட்டு நாலுபேர் தூக்களூ நடு வீதியில் நடக்காமலே நீ பயணிப்பாய். வினாடி கூட வியர்த்துப்போகும் வேகத்தில் உறவென்;;று வந்தவரெல்லாம் ஒரு பிடி மண்ணோதியுன்; கன்னத்தில் வைத்துப்புதைப்பார்கள். இனி நீ மையித்து தான். அதற்கு முன் சரித்திரம் படித்து, சமய ஆற்றில் குளித்து, சன்மார்க்க மதுகுடித்து, என்னிலிருந்து பிரிந்து போ. நான் நிலத்தில் தளைத்த சூரியன்.
உலகமென்ற பிணக்காட்டில்ளூ கோமணத்தை விற்றுக்குடைபிடிக்கும் மானஸ்த்தனுகள் வாழ்கிறார்கள்;. விபச்சார மேடையில் பத்தினி வேசமவர்களுக்கு. முஸ்லிம், சிங்களம், தழிழென்ற மதச் சுவர்களுக்குள்;ளூ இரகசிய ரகசியமாய் இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதை கூட்டம் கூட்டமாக ரசிக்கும் தலைவர்களின் இருப்பிடமும் அதுதான். நாம் ஒன்றுபட முடியாதவாறு காவியுடைக் கவசங்கள் தீட்டும் திட்டத்தில் இலங்கைத் தீவுக்குள்;ளூ இனத் தீர்வுவென்பது சந்தர்ப்ப வாதமாகவே அமையும்.
சிறுபாண்மையினரின் பெரும் பதவிகள் பறிக்கப்படுவதும், பொம்மைப்பதவி வழங்கப்படுவதும், பாராளுமன்றக் கதிரைகள் குறைக்கப்படுவதும், கல்வித் திறமைகள் அழிக்கப்படுவதும், கட்சிகளைப் பிளப்பதும் காவி அணியின் அஜந்தா.
இங்குளூ காளான்களாய் முளைத்த பொது ம(ப)ல சேன இன்று காண்டாமிருகமாய் வளர்க்கப்படுவது உனக்குத் தெரியாதா?... அது வளர்ந்தால்ளூ சிறுபாண்மையினர் மீதான செதிலடிப்பு வேட்டையினை எவராலும் நிறுத்த முடியுமா?
சிலநேரம் உரிமைகள் அடகு வைக்கப்பட்டபின்ளூ நாம் வாக்களிக்க வேண்டிய தேவையற்றுப் போனாலும். கோழியும், மாடும், சைக்கிலும், காசும், கொட்டையும், குஞ்சும்; நமக்குக் கிடைக்கும். நம் தலைவர்கள் பெற்றுத்தருவார்கள். நீ உன் குடும்பத்திற்குக் கொடுக்கலாமென்ற சந்தோஷத்திலிருப்பாய். அந்நேரம்ளூ
தொடர்ந்து நமது நிலமெல்லாம் புண்ணிய பூமியாக்கப்பட்டு, புதையல்கள் எடுக்கப்பட்டடு, ஆலிம் நகரிலும், அஷ்ரப் நகரிலும், நுறைச் சோலையிலும் சமத்துவமென்ற பெயரில் மொழிக்கலப்பேற்படும். சமய சம்பிரதாயங்கள் சீரழியும். அதற்குப் பிறகுளூ 'அப்பே ரட்ட' என்ற சப்த்தம் காவி புறத்திலிருந்து கேட்கும்ளூ நாமெல்லாம்ளூ வந்தேறு குடிகளென்ற அடிமைச்சாசனம் எழுதப்பட்டு, கழுத்திலும் தொங்க விடப்படும் அது உன்னை 'அப்பே ரட்ட' என்ற கோசத்தோடு பர்மாவிற்குள் தள்ளிவிடும்.
அப்போதுளூ இனச்சுத்திகரிப்பை நியாப்படுத்த சோனிக் குளத்திலிருந்து, சால்வைக்குள் பிரித்தெடுக்கப்பட்ட நன்றித் தவலைவர்களுக்குளூ கோடி கோடியாய் அரசு கொடுக்களூ நக்குண்டு நாவிழந்த தலைவனின் இரத்தத்தில் திமிரு முளைக்கும். அவன் காதால் பேசுவான், கண்ணால் ஆடுவான், வாயால் நடப்பான், சொந்த ஊருக்குள்ளேயே சுவர்களில் சிரித்து நிற்பான்.
நீ போட்ட ஓட்டுக்கு கணக்குக் கேட்டால்ளூ அவன் போட்ட றோட்டுக் கதை சொல்லுவான். கொமிசனை மறைத்து வைப்பான். நீ பாவமாகி உண்ண வழியுமின்றி அந்த றோட்டோரத்திலேயே முடங்கிக் கிடப்பாய். கோடிகளைவாங்கி ஏப்பமிட்டகளைப்பில்தான் நம் தலைவர்கள் கோணல் வாயன்களாகி கொட்டாவிவிட்டுத் தூங்குவதை நீ காண்பாய். பிறகென்ன.........? பிற்காலங்களில் மனசாட்சியைக் கேட்டு வாக்களிக்கப் பழகிக்கொள்ள வேண்டியதுதான். உன்னுரிமை உன்னிடமே.
கிறிஸ்மேன் வந்ததும், பிள்ளைகளை வெட்டியதும், மனைவியைத் தொட்டதும், மகளைத் துரத்தியதும், பள்ளியை உடைத்ததும், பன்றியை அறுத்ததும், ஹலாலைத் தடுத்ததும், ஹபாயாவைக் கிழித்ததும்ளூ நம் தலைவர்களுக்குக் கனவு போலதானிருக்கும்ளூ ஏனென்றால் அவர்கள் கோடிகளை விழுங்கிய ஏப்பக்களைப்பில் தூங்குகிறார்களல்லவா?
நீ விழித்திரு! நமது கலாச்சாரம் இழிவுபடுத்தப்பட்டமைக்காய் எதிர்த்துப் புள்ளடியிடு! வெற்றி தோல்வி என்பது முடிவில் தான்;. வீரம் தான் நமக்கு ஆரம்பச் சொத்து, தூங்கிவிடாதே! தோற்று விடுவோமோ என்ற பயத்தினாலும், வென்றவனோடிருந்திருக்கலாமே என்ற நப்பாசையினாலும் நீயும் பதவிப்பித்தனாக அலைவது கூடாது. உணரப்பட முடியாதவர்களுக்கு உணர்த்தப்படும் தருணமிது. விழித்திரு.
கனிமத்துப்பொருளையெல்லாம் வாலாட்டித் தலைவனுகளுக்கு கொடுத்துவிட்டு கலிமாவின் பொருளுணர்ந்தவனாய் விழித்திரு பாராளுமன்றக் கதிரைக்கான தேர்வல்ல....இது நமது பாராம்பரியப் பாதுகாப்பிற்கான தேர்வு. சோர்ந்து விடாதே! அன்னத்தைப்போல பாலையும் நீரையும் பிரித்தறிய............. மறந்துவிடாதே!.
Post a Comment