Header Ads



அபிவிருத்தி செயற்றிட்டங்களின் ஊடாக நாட்டிற்கு புதிய பெறுமதியை பெற்றுக்கொடுக்கவுள்ளேன் - மஹிந்த

அபிவிருத்தி செயற்றிட்டங்களின் ஊடாக நாட்டிற்கு புதிய பெறுமதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்திகள் தொடர்பாக யார் எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் தமது அரசாங்கம் தொடந்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச கணக்காய்வாளர்களுடன் இன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

உணவுக்காக மாத்திரம் தமது அரசாங்கம் சர்வதேச கடன்களை பெறவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திகளுக்காகவே அவற்றை ஈடுபடுத்தியதாக குறிப்பிட்டார்.

நாட்டில் அபிவிருத்தி என்ற அடிப்படையில், துறைமுகமோ அல்லது வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அது ஒரு சொத்தாக அமைகின்றது.

இந்த அனைத்து விடயங்களாலும் தாம் நாட்டிற்கு புதிய பெறுமதி சேர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1 comment:

  1. ஏற்கனவே செய்த அபிவிருத்திக்கு மக்களால் ஈடுகொடுக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
    எப்படியாவது பெளத்தர்களை மூளைச்சலவை செய்த்து வாக்குகளை பறித்தெடுக்கும் பித்தலாட்டம்தான். பெளத்தர்கள்தானே இலகுவாக ஏமாறுகின்றார்கள்.

    மக்களை நெருக்கடிக்குள் தள்ளி சாவடிப்பதன் பெயர் அபிவிருத்தி என்றால் அப்படியொரு கொடூரமான அபிவிருத்தி நாட்டின் மக்களுக்கு அவசியமே இல்லை. கோடி கோடியாய் அபகரித்தீர் இனியாவது மக்களை நிம்மதியாக வாழவிடும். இதுவரைக்கும் பெளத்தர்களில் பலர் பாமரர்களாகவே தலையாட்டிக்கொண்டிருந்தனர் தற்காலம் அவர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் என்பதை உமது அரசாங்கத்தை நிராகரிப்பதன் மூலமாக ஊர்ஜிதப்படுதியுள்ளார்கள். ஆனால் சிலருக்கு பதிவி மோகம் தலைக்கேறிவிட்டது அதற்காக எதுவும் செய்யத்துணிந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயம். இந்த நிலைமையில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றவேண்டும் என்று ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நாம் சொல்ல ஆரம்பித்தோம் ஆனால் எம்மை பலர் திட்டிதீர்த்தார்கள். நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரமில்லை என்றெண்ணினோம் இறைவன் உதவியுடன் அக்காலம் இன்று நன்றே கனிந்துள்ளதை காண்கின்றோம் அந்த வகையில் நாம் திருப்திப்படுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.