'திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்பது லஞ்சம் பெறுகின்றமைக்கு நிகரானது'
ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள தருணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கின்றமை லஞ்சம் பெறுகின்றமைக்கு நிகரானது என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
பொது எதிர்கட்சியினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திஸ்ஸ அத்தநாயக்க சூழ்ச்சியான முறையில் கட்சியை விட்டு சென்று அரசாங்கத்தில் பதவியொன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரிடம் அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக்கொள்வது பல வருடங்கள் சிறை செல்ல வேண்டிய ஒரு குற்றமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
Post a Comment