Header Ads



'எனக்கு ஆட்சி செய்வதை விட, மனைவியை திருப்திபடுத்த பரிசை தேர்ந்தெடுப்பதே கடினமானது'

'எனக்கு ஆட்சி செய்வதை விட, மனைவியை திருப்திபடுத்தும் வகையிலான கிறிஸ்துமஸ் பரிசை தேர்ந்தெடுப்பதே மிகவும் கடினமானது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:

என் மனைவி மிகவும் அழகானவர். அவரின் ரசனையும் அவரைப் போலவே அழகாக இருக்கும். அவரின் விருப்பப்படி ஆடைகளை தேர்வு செய்ய எனக்கு தெரியாது. அவரை திருப்திபடுத்தும் வகையிலான கிறித்துமஸ் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பதே எனக்கு பெரும் சவாலானது. ஆட்சி செய்வதை விட, என் மனைவி மிட்சலுக்கு பிடித்தமான பரிசை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானது. என் மூத்த மகள் மலியாவுக்கு, சினிமா மீது ஆர்வம் அதிகம்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக, சிறந்த, 100 திரைப்படங்கள் அடங்கிய சி.டி.,க்களை வாங்கிக் கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்ட என் மகள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவளின் வாழ்நாளில் அந்தப் பரிசு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

விடுமுறை கொண்டாட்டம்:

அதிபர் ஒபாமா, ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட, தன் சொந்த ஊரான ஹவாய்க்கு, தன் குடும்பத்தினருடன் சென்று விடுவார். விடுமுறையை உற்சாகமாக கழித்த பின்னரே, வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்.

No comments

Powered by Blogger.