தேர்தல் நாளை நடைபெற்றால், மைத்திரிபால வெற்றிபெறுவார் - புதிய கருத்துக் கணிப்பு வெளியாகியது
தேர்தல் நாளை நடைபெற்றால் மைத்திரிபாலசிறிசேனா வெற்றிபெறுவார் என மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுக்கொள்கை நிலையம் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...
ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக்கொள்கை நிலையம் இணையம் மூலமாக ஆய்வொன்றினை மேற்கொண்டது, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை எதிர்வு கூறுவது இதன் நோக்கமல்ல மாறாக தேர்தல் தொடர்பாக மக்களின் கருத்தை பெற்று அரசியல் விவாதங்களுக்கு பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
குறிப்பிட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் நாட்டை பாதிக்கின்ற முக்கிய விடயங்கள் குறித்து சுட்டிக்காட்ட்பட்டு அதில் எது குறித்து வேட்பாளர்கள் முக்கிய கவனம் செலுத்தவேண்டும் என கேட்டதற்கு 51.71 வீதமானவர்கள் ஊழலை தெரிவுசெய்தனர். 20 வீதமானவர்கள் பொருளாதாரத்தையும், 19 வீதமானவர்கள் அரசமைப்பு சீர்திருத்தததையும், 8 வீதமானவர்கள் மனித உரிமைகளையும் தெரிவு செய்தனர்.
தேர்தல் நாளை நடைபெற்றால் மைத்திரிபாலசிறிசேனா வெற்றிபெறுவார் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 23 வீதமானவர்களே மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கட்சிதாவுதல் காரணமாக எதிரணிக்கே அதிகளவு நன்மை கிடைத்துள்ளது என 90 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அடுத்த தேர்தலில் வாக்களிப்பதற்கான காரணம என்னவென்ற கேள்விக்கு ஊழலை ஒளித்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதே என பலர் தெரிவித்தனர். ராஜபக்ச அரசாங்கத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பலர் குறிப்பிட்டுள்ள அதேவேளை ரணில்-சந்திரிகா ஆட்சியை விரும்பவில்லை என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment