தேர்தல் சுயாதீனமாக நடைபெறுமா..? சோபித தேரர் அச்சம்
தேர்தல்கள் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாக மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் சுயாதீனமான முறையில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து தேர்தல் சட்டங்களையும் அரசாங்கம் மீறிச் செயற்பட்டு வருவதாகவும் இதனை தேர்தல் என்று சொல்வதனை விடவும் வாக்கு கொள்ளையாகவே கருத வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பாரயளவில் அரசாங்கம் தானங்களை கொடைகளை வழங்கி மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது எனவும் இதுவும் ஓர் வகையிலான லஞ்சமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வானொலிச் சேவைகள் தம்மையும் எதிர்க்கட்சியினரும் கடுமையான வார்த்தைகளில் திட்டித் தீர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் அவரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.
தேர்தல் ஆணையாளருக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் அவரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத நிலைமை காணப்படுவதாகவும், ஜோதிடர்களே தேர்தலை நிர்ணயிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எல்லையற்ற அதிகாரங்கள் காணப்படுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் ஊடாகவே இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெளத்தர்கள் கண் திறக்கும் வரை நாட்டில் ஒரு போதும் நல்லவை நடக்காது. நாட்டை கண்டவன் நிண்டவன் கொலைகாறன், கொள்ளைக்காறன் எல்லோரும் சூறாயாடிவிட்டு உங்கள் கோவணத்தையும் உருவி எடுத்துவிடுவான் அது வரைக்கும் நீங்கள் “ அப்பே ரட, அப்பே ரடய்” என்று பாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ReplyDelete