நாமல் ராஜபக்ஷ எங்கும் செல்ல தேவையில்லை, ஜனாதிபதி செயலகத்தை ரெடியாக்குங்கள் - மங்கள சமரவீர
மைத்திரி ஆட்சியின் கீழ் எவரையும் பழிவாங்க தயாரில்லை எனவும் அந்த ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று 18-12-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரி ஆட்சியின் கீழ் எவரையும் பழிவாங்கும் தேவையில்லை. அரசாங்கம் ஏற்கனவே தேர்தலில் தோற்று விட்டதை அரசாங்க தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தெளிவாகியுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல முடியாது போனால், மத்தள விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல போவதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அவர் எங்கும் செல்ல தேவையில்லை, இலங்கையில் இருந்து கொண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் ஈடுபடலாம்.
சிறந்த அரசியல் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் தேவையிருந்தால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக சிரமங்களை அனுபவிக்க வேண்டும்.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவரால் ஆட்சியில் இருக்க முடியும் என பேங்கமுவே நாலக தேரர் கூறியுள்ளார்.
நாலக தேரர் மக்களுக்கு தெரியாத கற்பினை கூறாது, தர்ம போதனையை மாத்திரம் செய்யுமாறு நாங்கள் அவரை கேட்டுக்கொள்கிறோம்.
மகிந்த ராஜபக்ஷவின் தோல்வி ஜனவரி 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன, 10 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்பார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட முடியும். அப்போது சில நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமும் வேறு இடத்தில் இருக்கலாம்.
மேலும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்கள் பிற்பகல் 5.15 மணிக்கும் பணி முடிந்து சென்ற பின், 5 மணி வரை தனது அலுவலகத்தில் இருந்து டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல பணிகளையும் நிறைவுசெய்ய வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி செயலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அவருக்கு அறிய தருவதாகவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
Post a Comment