மைத்திரிக்கு ஆதரவளிப்பது குறித்து, றிசாத் பதியுதீன் தீவிரமாக ஆராய்வு..!
அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
எதிரணியிலுள்ள மிகபரபல்யமான அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
அதேவேளை நேற்று மற்றும் முன்தினம் ஆகிய 2 தினங்களிலும் அமைச்சர் றிசாத், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment