Header Ads



மஹிந்தவுக்கு ஆதரவளிக்குமாறு, ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திய பிரதமர் ஜயரத்ன

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் போது முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று 21-12-2014 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் குறைபாடுகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். எனினும் அவை உரிய முறையில் தீர்க்கப்படவில்லை. அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

இதன்காரணமாகவே இன்று கட்சி மாறல்களும் இடம்பெறுகின்றன. எனினும் தமது கட்சி இந்த விடயத்தில் உடனடியான தீர்மானத்துக்கு வராது.

இன்னும் இரண்டு நாட்களில் தமது தீர்மானம் வெளியாகும் என்று ஹக்கீம் குறிப்பிட்டார்.

இன்றைய கண்டி நிகழ்வில் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பிரதமர் டி.எம்.ஜெயரத்னவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதை சீர்தூக்கி பார்க்குமாறு தம்மிடம் வலியுறுத்தினார்.

எனினும் தாம் தனிப்பட்ட முடிவை எடுக்கமுடியாது. முஸ்லிம் மக்களின் அபிலாசைகள், தமது கட்சியின் அபிலாசைகள் என்பன தமது தீர்மானத்துக்கு முன்னர் முக்கியத்துவப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கையில் நீதித்துறையில் குறைப்பாடுகள் உள்ளன. நல்லாட்சி தேவை மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல்; விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.

எனவே தமது தீர்மானத்தின்போது இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களும் சீர்தூக்கி பார்க்கப்படும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.

2 comments:

  1. If D.M.J on President Candidate SLMC can support him. we can believe him as well. But MR looks one side always.

    ReplyDelete

Powered by Blogger.