அவுஸ்திரேலிய கொலை சூத்திரதாரி, உடலை புதைக்க யாருமில்லை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை, 16 மணி நேரம் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹரோன் மோனிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய, அந்நாட்டின் எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை. அவன் உடலை, கடலில் அமிழ்த்துங்கள் என, மதகுருமார்கள் கூறியுள்ளனர்.
கடந்த 15ல், சிட்னி ஓட்டல் முற்றுகையின் போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, உடல் இன்னமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை; உடலை கேட்டு, இது வரை யாரும் அரசை அணுகவில்லை. இந்நிலையில், மோனிஸ் மனைவி அமிரா டிரவுடிஸ், 35, வசம், உடல் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது உடல், சிட்னி நகர மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உடல், மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அதற்கு முஸ்லிம் வழக்கப்படி மதச் சடங்குகள் செய்ய மாட்டோம் என, ஆஸ்திரேலியாவின் முன்னணி முஸ்லிம் அமைப்புகளும், மதகுருமார்களும் கூறியுள்ளனர்.
'அமைதியான ஆஸ்திரேலியாவில், பயங்கரவாத விதை விதைத்தக்கு நியாயமான இறுதிச் சடங்கு தேவையில்லை. உடலை கடலில் தான் அமிழ்த்த வேண்டும்' என, அங்குள்ள முஸ்லிம் மதகுருமார்கள் கூறுகின்றனர்.
Post a Comment