ஹக்கீமும், றிசாத்தும் மைத்திரிபாலவின் அரசாங்கத்தில் இடம்பெற வேண்டும் - ஆசாத் சாலி
தற்போதைய எதிரணியில் முஸ்லிம் அரசியல்வாதி என்றவகையில தாம் ஒருவரே அங்கத்துவம் வகிப்பதாகவும், மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமம், றிசாத் பதியுதீனும் அங்கம் வகிக்க வேண்டுமென்பது தமது விருப்பமாகுமென ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவதுஈ
முஸ்லிம்களின் நலனில் ஹக்கீமுக்கும், றிசாத்திற்கு உண்மையான ஆர்வம் இருக்குமேயானால் அவர்கள் இருவரும் உடனடியாக தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்துகொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவது உறுதியானது. இந்நிலையில் அவர் தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்திலும் ஹக்கீமம், றிசாத்தும் இடம்பெற வேண்டுமென்பதே தமது விருப்பம் எனவும் ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் தெரிவித்தார்.
Post a Comment