Header Ads



பாப்பரசர் வருவாரா..? வரமாட்டாரா..??


பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 8ம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றவுள்ளது. இந்த நேரத்தில் மூன்றாவது முறையாக தேர்தலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் வெற்றிக்காக பாப்பரசர் பிரான்சிசின் இலங்கை விஜயத்தை சாதகமாக பயன்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியாகியிருந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமை கத்தோலிக்கர்களை வெறுப்படையச் செய்துள்ளதாகவும் கத்தோலிக்க பத்திரிகை ஒன்றின் முன்னாள் ஆசிரியர் ஹெக்டர் வெல்கம்பொல தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.