Header Ads



ஸ்மார்ட் போன்களின் விலை குறையும் - ஆய்வில் தகவல்

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணி்க்கப்பட்டுள்ளது.

சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும்  கடுமையாக சரிந்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுதான் வருகிறது. 

No comments

Powered by Blogger.