Header Ads



சிறைச்சாலையை உடைத்து வெளியேவந்த, மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி - அநுரகுமார திஸாநாயக்க

(Nf)

சர்வதிகார ஆட்சியை நிறைவு செய்து, அதற்கு அப்பாற் சென்று செயற்திட்டமொன்றுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

குருநாகல் நகரில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”சர்வதிகார ஆட்சியை தோற்கடிப்போம் – ஜனநாயகத்திற்காக ஒன்றிணைவோம்” என தொனிப்பொருளில் நடைபெற்று வரும் கூட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்ததை இட்டு, மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றியை தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும், சர்வதிகார முறைமையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் ஹெல உறுமய பாரிய பங்களிப்பை வழங்கியது. எனினும், ரத்தன தேரர் உள்ளிட்ட தரப்பினர் வெளியேறினார்கள். மிக்க நன்றி. நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ன கூறினாலும், பின்தள்ளப்பட்டுள்ளனர். வெட்கப்பட வேண்டிய விடயம். எமது வீட்டிற்கு முன்பாக வீட்டு தவளைகள் இருக்கின்றன. குளிருக்கு சுருண்டு இருக்கும். வெளியே வீசினாலும், மீண்டும் அதே இடத்திற்கு வந்து விடும். 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சக்திகள் கிடையாது. 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சக்திகள் கிடையாது. அதனால் ஜனவரி மாதம் 8ஆம் திகதி அவர்களின் தோல்விக்காகவே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சர்வதிகார ஆட்சியை விரட்ட வேண்டியுள்ளது. அதற்கு பின்னர் நெடுந்தூர பயணமொன்று உள்ளது. அந்த பயணத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

No comments

Powered by Blogger.