Header Ads



ஆரோக்கிய உணவு தெரிவுப் போட்டி - நீதி அமைச்சுக்கு முதலாம் இடம்

(எப். எம். பைரூஸ்)

ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்யும் போட்டியில் நீதி அமைச்சு முதல் பரிசைப் பெற்று வெற்றி ஈட்டியுள்ளது.

“நோயற்ற இலங்கை” தேசிய வேலைத் திட்டத்துக்கு இணைவாக இப்போட்டி அமைச்சுக்கள் மத்தியில் நடைபெற்றது.

தற்போது அனுஷ்டிக்கப்படும் நோயற்ற இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் சிறு நீரகம், புற்றுநோய் அடங்கலாக தொற்றா நோய் ஒழிப்பு தினம் வியாழனன்று அநுஷ்டிக்கப்பட்டது.

கல்கிஸ்ஸை ஹோட்டலின் பிரதம சமையற்காரர் கலாநிதி பபிலிஸ் சில்வாவின் பங்குபற்றுதலோடு அமைச்சு மட்டத்திலான இப் போட்டி சுகாதார அமைச்சில் நடைபெற்றது. பல்வேறு அமைச்சுக்களும் ஆரோக்கிய உணவுகளை சமர்ப்பித்திருந்தன.

நீதி அமைச்சின் ஆரோக்கிய உணவுக்கு முதலாம் ஸ்தானம் கிடைத்தது.

இந்த ஆரோக்கிய உணவை சமர்ப்பித்த நீதி அமைச்சின் பெண் அதிகாரியிடம் சுகாதார அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன சான்றிதழைக் கையளித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால, பிரதிப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மி சோமதுங்க, பிரதம கணக்காளர் டி. ஏ. டபிள்யூ. வணிகசூரிய உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.