Header Ads



அக்குறணைப் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

(JM.Hafeez)

அக்குறணைப் பிரதேச சபையின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பின்றி ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. (18.12.2014)

அக்குறணைப் பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.விம்சான் தலைமையில் இன்று கூடிய போது 2015த் ஆண்டிற்கான மொத்த செலவினம் ரூபா 75 68650 எனவும் உத்தேச மொத்த வரவு ரூபா 7614650 எனவும் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அதனை அடுத்து பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது. சபையில் மொத்தம் 14 அங்கத்தவர்களில் இருவர் சமூகமளித்திருக்க வில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து அங்கத்தவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐவரும் மாக சபையில் பிரசன்னமாக இருந்த அனைவரதும் சம்மதத்ததுடன் பிரேரணை ஏக மனதாக விறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான், உபதலைவர் அமரஜீவ, சபை அங்கத்தவர்களான அமரகோன்,  சிரிமல், மன்சூர், அல்விஸ், சமிந்த, நிரஞ்சன், அஜ்மீர் பாரூக், ஹூசைன், மிஹ்லாhர், சிராஜ் ஆகியொர் பிரசன்னமாகி இருந்தனர்.

No comments

Powered by Blogger.