Header Ads



பூஜிக்க வேண்டிய அலரி மாளிகை, அதன் புனிதத்தை சீர்குழைத்துள்ளது - மைத்திரிபால சிறிசேன

அலரி மாளிகையை தேர்தல் காரியாலயமாக மாற்றி அதன் புனிதத் தன்மையை சீர்குழைத்துள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார்.

அலரிமாளிகையானது இலங்கை அரச தலைவர்களால் பூஜிக்க வேண்டிய இடம் என அவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது 70 சதவீதமானவர்கள் தனக்கு ஆதரவாக திரண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தாம் அலரி மாளிகையில் இருந்து ஆட்சி நடத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தன்னை தேர்ந்தெடுத்த அரசியல் கட்சிகள், குழுக்களின் விருப்பத்துடன் பொலன்னறுவையில் உள்ள தனது சொந்த வாசஸ் தலத்திலிருந்தே ஆட்சி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

திறைசேரியில் உள்ள பாரியளவு நிதி நாட்டை அபிவிருத்தியடைய செய்வதற்கு பயன்படுத்தப்படாது, அரசியல் நிலைப்பாடுகளை வலுவடைய செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

சீர்குழைந்த சமநிலையற்ற சமூகத்தில் தனவந்தர்கள் மாத்திரம் வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவித்து வருவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.