அரசாங்கத்திடம் நிதி பெற்றபின், பிரச்சாரத்தில் ஈடுபடாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை
-Gtn-
அரசாங்கத்திடம் நிதி பெற்றுக்கொண்ட பின்னர் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடாமல் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியும் அரச விசுவாசியுமான அனுரசேனநாயக்கவிற்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அரச புலனாய்வு பிரிவினால் தேர்தல் பணிகளிலிருந்து விலகியிருக்கும் 46 அமைப்பாளர்களின் பெயர்விபரங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைப்பாளர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்படும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்காணிப்பதற்காக ஒய்வுபெற்ற பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை நியமிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளரிடம் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர்கள் தொடர்பான கோப்புகளை தயாராக வைத்திருக்குமாறும், தான் மீண்டும் தெரிவானதும் அவர்களுக்கு எதிரான கடுமையான,பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஜனாதிபதி உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளார்.
Post a Comment