Header Ads



நாமல் ராஜபக்ஸவும், அவர் சுயநலன்களும்..!

பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க-

(Gtn)

நாமல் ராஜபக்ச தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகள் குறித்து நண்பர்களுடன் உரையாடும்போது அது குறித்த எந்தவித தயக்கத்தையும் வெளிப்படுத்துவதில்லை.அதில் தவறேதும் இருப்பதாக அவர் கருதாததே அதற்கு காரணம்.

கடந்த பல வருடங்களாக வர்த்தகபிரமுகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான நெருக்கமான உறவு இலங்கை அரசியலில் உருவாகியுள்ளது. அரசியல்வாதிகள் இதன் மூலம் கிடைத்த நன்மைகளை நட்பிற்கான அடையாளம் என கருதினர்.

அதேபோன்று வர்த்தகபிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் அவ்வாறே கருதினர். ரொனிபீரிஸ் என்ற வர்த்தகபிரமுகர் மூலமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பலநன்மைகளை பெற்றார்.

எனினும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உறுதியானநிலையயை அடைந்ததும், இந்த நிலைவிரிவடைந்தது, நாமல் ராஜபக்ச விரைவில்  பல வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகர்களுடன் நண்பரானார். கசினோ பார்க்கர் விவகாரம் இதற்கு நல்ல உதாரணம். 

இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளை தானே ஊக்குவிப்பதாகவும், நாடு இவற்றால் நன்மையடையும் எனஅவர் நம்பவைத்தார் நாமல் தனது நண்பர்களுடன் இணைந்து இலங்கை பங்குச்சந்தையில் ஏற்படுத்திய குழப்பம் முக்கியமானது. அவர்கள் அதனை கண்மூடித்தனமாக தங்களது நலன்களுக்காக துஷ்பிரயோகம் செய்தனர்.

ஜனாதிபதி முதலில் இலங்கை பங்குச்சந்தையின் தலைவராக தனது செயலாளர் லலித்வீரதுங்கவின் மனைவி இந்திரானியை நியமித்தார், அவர் மிகவும் நேர்மையானவர்,

எனினும் சில நாட்களுக்கு பின்னர் அவர் அந்த பதவியிலிருந்து விலக தீர்மானித்தார், நாமல் ராஜபக்சவின் நடவடிக்கைகள் காரணமாவே தனது மனைவி பதவிவிலக தீர்மானித்தமை லலித்வீரதுங்கவை மன உளைச்சலிற்கு உள்ளாக்கியிருந்தது.

அதன் பின்னர் இன்னொரு நேர்மையான அரசியல்வாதியான திலக்கருணரட்ண அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார், என்னுடனான சந்திப்பின்போது அவர் இலங்கை பங்குச்சந்தையை சுத்தம் செய்யவேண்டியிருக்கும் என்றும்,அதன் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்-  பின்னர் அவரும் பதவி விலகினார்.

அவருக்கு பின்னர் நியமிக்கப்பட்டவர் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அடிபணியக்கூடியவர் என தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளருக்கான இரகசிய பணபரிமாற்றமொன்றை அவர் மேற்கொண்டதாக வதந்திகள் உலாவின,  நிதிவிடயங்களில் நேர்மையானவர் என கருதப்பட்ட கோத்தபாய இந்தளவிற்கு  கீழிறங்கியது வெட்கக்கேடான விடயம். 

துமிந்த சில்வாவுடனான உறவே அவரை மாற்றியது. தற்போது அவரும் முக்கிய வர்த்தகர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளார். வெலிவேரிய சம்பவம் இதனை நன்கு புலப்படுத்தியது. 

குடிநீரை அசுத்தப்படுத்தியததாக குற்றம்சாட்டப்படும் குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைவரே படைகளை அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசாக கருதப்படும் நாமல் ராஜபக்ச ஒரு கொழும்பு இளைஞன். தான் நெருக்கமாக உள்ள செல்வந்தர்களின் கரிசனைகள் குறித்து மாத்திரம் சிந்திக்கும் இளைஞன். மேலும் அவர் மேற்கத்தைய உலகின் நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறியவர், அவர் அணியும் கைகடிகாரங்களே அதற்கு சாட்சி, அவை உலகதரத்திலானவை, மிகப்பெரும் விலையிலானவை.

இதைவிட முக்கியமானது தனது இரசனைகளுக்கு ஏற்றவிதத்தில் அவரால் பணத்தைபெறமுடிந்தது என்பதே.

நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுன ரணதுங்க நாமல் எவ்வாறு கிரிக்கெட்டில் முதலீடு செய்து அதன் மூலம் பணம்சம்பாதிக்கப் பார்த்தார் என ஒரு முறை எனக்கு தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் முடிவை தான் எதிர்த்ததாகவும், அதைவிட பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என தான் ஜனாதிபதியிடமே தெரிவித்ததாகவும் ரணதுங்க என்னிடம் குறிப்பிட்டார்.

எனினும் பின்னர் நாமல் அம்பாந்தோட்டை மைதானத்தை அமைப்பது தொடர்பாக ஆராய தன்னிடம் முதலீட்டாளர் ஒருவரை அழைத்துவந்ததாகவும், அந்த மைதானத்தை அமைப்பதற்கு 15 மில்லியன் டொலர்கள் செலவாகாலாம் என தான் தெரிவித்தவேளை நாமல் முப்பது மில்லியன் என தெரிவிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ரணதுங்க குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச நாட்டின் தேவைகளுக்கா தனது தேவைகளுக்கா முக்கியத்துவம் அளிக்கின்றார் என்பதும் முக்கியமான விடயம்.

2012 இல் ஜெனீவாவில் இலங்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வேளை அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்ல விடயம் என நாமல் தெரிவித்ததே துயரமான விடயம். 

1 comment:

  1. Definitely this is the reason for sri lanka lost the world cup cricket in 2011

    ReplyDelete

Powered by Blogger.