மீரியபெத்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் - கோத்தாபய ராஜபக்ஸ ஆரம்பித்துவைத்தார்
கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் 18-12-2014 இன்று ஆரம்பிக்கப்பட்டன.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸதலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பண்டாரவளை பூணாகலை தோட்டத்தின் மாகந்த மல்லவவத்தை பிரதேசத்தில் இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 75 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட உள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment