Header Ads



முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் ஏமாற்றிய அரச தரப்பு..!

முஸ்லிம்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்தவாரம் நடைபெற்றிருந்தது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தொடர் பேச்சுகக்ளில் ஈடுபடுவார்கள் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தியிருந்ததுடன் (டிசம்பர் 3 அல்லது 4) ஆம் திகதிகளில் அரசாங்க அமைச்சர்கள் தம்முடன் பேச்சுக்களில் ஈடுபடலாமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருந்தபோதும் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் இந்த செய்தி எழுதப்படும் (ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி அதிகாலை வேளை) வரையிலான காலப்பகுதி வரை அரச தரப்பிடமிருந்து, முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தவிதமான அழைப்பும் கிடைக்கவில்லை என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இதனால் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களிடையே அதிருப்தி நிலை மேலாங்கியிருப்பதுடன், தம்மை அரசாங்கம் மீண்டும் ஏமாற்றியிருப்பது போன்ற உணர்வு மேலாங்கியிருப்தாகவும் அறியவருகிறது.

1 comment:

  1. தனியாக கேளு தலைவா இல்லையென்றால் நமக்கு மைதிரும் ஒன்றுதான் ராஜபக்ச வும் ஒன்றுதான். சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றாக சேர்ந்து தனியாக கேளு நாங்கள் ஜனதபதிய தீர்மானிக்கும் கச்சாக இருந்தால் எல்லாம் கைகூடும் இல்லை என்றால் எல்லாம் காலை வாரி விடுவார்கள். நீ ஒரு முஸ்லிம் மக்களின் பிரதி நிதி என்பதால் மானம் பார்க்காமல் எல்லா முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தெளிவாக விளங்க படித்து அவர்களை சேர்த்துக்கொள்

    ReplyDelete

Powered by Blogger.