Header Ads



மகிந்த ராஜபக்சவுக்கு 'பண்டாரநாயக்க போபியா நோய்' - அதற்கு "என்னிடம் மருந்து எதுவுமில்லை"

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க அச்சம் (பண்டாரநாயக்க போபியா) என்ற நோயினால் பீடிக்கப்ட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்ற தனது முடிவை அறிவிப்பதற்கா இன்று மாலை கொழும்பில்  ஏற்பாடு செய்தசெய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அச்சத்திற்கு "என்னிடம் மருந்து எதுவுமில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னுடைய உண்மையான போட்டியாளர் முன்னாள் ஜனாதிபதியே, மைத்திரிபால அவரது பகடைக்காயே என தெரிவித்திருந்தமைக்கே சந்திரிகா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகாவிற்கு அருகில் அமர்ந்த படி சந்திரிகா ஹிருணிகாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்தென்ற முடிவை எடுப்பதற்கு முன்னர் நன்கு சிந்திக்குமாறு முன்னாள் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஹிருணிகா குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.