இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கிண்ணியா ஆதார வைத்தியசாலை காணி, நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பு
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை, கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று 18-12-2014 மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த காணி இராணுவத்தின் தேவை கருதி நிர்வகிக்கப்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 80 பேர்ச் காணி இராணுவத்தின் 22 ஆவது படையணியால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இந்த காணியை மீள ஒப்படைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் 22 ஆம் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் காணி மீள ஒப்படைக்கப்பட்டதாக பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மேலும் கூறினார்.
Post a Comment