Header Ads



மஹிந்தவை ஜனாதிபதியாக ஆமோதித்தவன் நான்தான், முஸ்லீம்கள் சந்தோசபட வேண்டும் - பௌசி


(அஸ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இம்முறை ஜனாதிபதியாக வருவதற்கு வேற்பாளராக ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரேரித்தார். நான் அதனை ஆமோதித்தேன். அதற்காக முஸ்லீம்கள் சந்தேசப்படல் வேண்டும். நான் ஓரு முஸ்லீம்  மஹிந்தவை கட்சியில் ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது. என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தாh.;

நேற்று மருதானை சங்கராஜமாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை  850 இலட்சம் ருபா செலவில் நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும் வைபவத்திலேயே மேற்கண்டவாறு சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அங்கு தெரிவித்தார். இந் நிகழ்வில அமைச்சர் விமல் வீரவன்சவும் ;கலந்து கொண்டார்

பேளசி  தொடர்ந்து உரையாற்றுகையில் -.

நீங்கள் கடந்த காலத்தில் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினை  சற்றுசிந்தித்துப்பாருங்கள் மருதாணையில் உங்களுக்கு முன்னாள் உள்ள அல்ஹிதாயா பாடசாலைக்கு சென்று பாடசாலை கேற்றடியில் தமது பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வருவதற்கு தாய்மார்கள் கூடி நிற்பீர்கள். இப்ப அந்த நிலமையில்லை. 

காத்தாண்குடியிலேயே தொழுது சுசுது செய்து கொண்டிருந்த 122 முஸ்லீம்களை சுட்டுக் கொண்றார்கள். தமது கணவன் தொழிலுக்குப்போனால் அவர் வரும் மட்டும் துவாக் கேட்டுக் கொண்டு வீட்டுக்கதவரில் காத்து இருப்பீர்கள். வடக்கு கிழக்கில் எல்லைப் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகின்ற நாம் ஆமிக்கு பாதுகாப்பு கேட்போம்.  நாம் தொழுது முடியும் மட்டும் இராணுவம்; பள்ளியை வளைத்து பாதுகாப்பு வழங்குவார்கள். இப்ப அப்படியான நிலைமை இல்லை. நல்ல சமாதாண நிலையில் இந்த நாட்டில் எங்கும் 24 மணித்தியாலயமும் போகி வரலாம். இந்தக் காலத்திலேயே உங்கட கணவன் இரவில நேரஞ்சென்றாலோ அல்லது அவர் எந்தப் பெண்னுடன் போனாலும் தேடமாட்டிர்கள்.  

இந்த யுத்த வென்றுதந்த மட்டுமல்ல நல்ல அபிவிருத்திகளையும்  இந்த நாட்டில் ஆட்சி செய்த எந்தவொரு ஜனாதிபதியும் செய்யாத அபிவிருத்திகளை ஜனதிபதி மஹிந்த ராஜபக்சதான் பெற்றுத் தந்திருக்காரு. நான் அவர் 3 முறை அல்லாமல் அவர் இறக்கும் வரை இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்று எனது வேண்டுகோள். ஆனால் முஸ்லீம்கள் ஒருபோதும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்கு போடமாட்டார்கள். ஆனால் சலுகைகளையும் அபிவிருத்திகளையும் வரப்பிரதாசங்களை  அனுபவித்து தேர்தல் வந்து எதிர்த்துதான் வாக்களிப்பார்கள். இது நல்ல விடயமல்ல. உப்பிட்டவரை  நாம் உள்ளவிலும் நினைக்க வேண்டும். நாம் இந்த முறை கொழும்பில் அமோக வாக்களித்து அவரின் வெற்றியில் பங்கு கொள்ள வேண்டும்.

இந்த வீடமைப்புத்திட்டம் போன்று கொழும்பு மாவட்டத்தில் 35 வீடமைப்புத்திட்டத்தினை அமைச்சர் விமல் விரவன்ச அபிவிருத்தி நவீணமயப்படுத்தி கொடுக்கின்றார். அதற்காக கோடிக்கணக்கில அவரது அமைச்சு பணம் செலவழிக்கின்றது. இந்த மாடிவீடுகளில் அதிகமாக வாழ்பவர் தமது தமிழ் முஸ்லீம் மக்கள். ஆகவே நீங்க இந்தமுறை மகிந்த ராஜபக்சவையும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில விமல் வீரவன்சவையும் வாக்களித்து இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க  வேண்டும். என சிரேஸ்ட அமைச்சர் பௌசி வேண்டிக் கொண்டார்.

3 comments:

  1. Pavam Fouzy Kan theyathu pola iruki

    ReplyDelete
  2. Dear Senior Minister still we asking security form BBS thugs' activities, When we ask the security during LTTE time they were given but now now putting curfew and allowing to BBS thugs to kill innocent Muslims and destroy their property. That's what we need to change you MR

    ReplyDelete
  3. மகிந்தவை உம்மால் அல்லது அஸ்வர் ஆல் மட்டுமே பிரேரிக்க முடியும் வேறு யார்தான் விரும்புவர்கள். இதைப்போய் பெருமையை சொல்ல உமக்கு வெக்மில்லையா.சோனகா, வேறு யாரும் மகிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிக்க விரும்பாத நிலையில் இவர் பிரேரித்த ராம், சீக் கழுத, மானம் கெட்டவனே உடனடியாக நீரும் மைத்திரியுடன் வந்து இணைந்து கொள்ளும்.

    ReplyDelete

Powered by Blogger.