Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும் அபாயம்..?

இலங்கை முஸ்லிம்களில் அதிகமானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டனர்.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸினைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் அநேகம் பேர் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடுக்கூட்டம் இன்று 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்டவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகப்பட்ச முஸ்லிம்களின் ஆதரவை ஒதுக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் கட்சி இரண்டாக பிளவுபடும் அபாயமிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது. 

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இரவு வேளை கலந்துரையாடிய போதே ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் இந்த விடயத்தை அறியக்கூடியதாக இருந்தது.

No comments

Powered by Blogger.