Header Ads



கல்குடா மஜ்லிஸ் ஷுரா விடுக்கும் செய்தி...!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி எமது நாடு ஒரு முக்கிய நிகழ்வை எதிர்பார்த்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜனநாயக நாடொன்றில் எவருக்கும் எந்த கட்சியிலும் இனைந்து போட்டியிட முடியும் என்பது போல் மக்கள் தாம் விரும்பும் எவருக்கும் தமது வாக்கை அளிக்கவும் முடியும.; இது அவரவர் அரசியல் உரிமையாகும.; இந்த அடிப்படையில் இத்தேர்தலை முஸ்லிம்களாகிய நாம் மிக மிக பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மஜ்லிஸ் ஷுரா வினயமாக வேண்டிக்கொள்கிறது.

கல்குடா மஜ்லிஸ் ஷுரா அதன் ஆரம்பம் தொட்டு இன்றுவரை எந்த ஒரு வகையிலும் தமது செயற்பாட்டில் அரசியல்சார் விடங்களில் யாருக்கும் எந்த வகையிலும் சார்பாக பணியாற்றாத ஒரு அமைப்பாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த அடிப்படையில் 2015 ஜனாதிபதி தேர்தலில் எமது சபையின் தீர்மாணத்தின் பிரகாரம் மஜ்லிஸ் ஷுரா எந்த ஒரு கட்சிக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ செயற்பட மாட்டாது. அத்துடன் எமது அமைப்பை சார்ந்த எவரினதும் தனிப்பட்ட செயற்பாடுகள் எமது அமைப்பை பிரதிபலிக்காது. அது அவரவர் உரிமையாகும். எனவே எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி எவரும் அரசியல்சார் விடங்களில் செயற்ப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது. 

முஸ்லிம்களாகிய நாம் எமது உரிமைகளையும் எமது சமூகம் சார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது இருப்பு மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பில் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்படுவது அவசியமாகும.; இந்த புத்திசாதுர்யமான செயற்பாட்டை இக்காலகட்டத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும்; எமது சமூகம் எதிர்பார்த்து நிற்கின்றது.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் எமது அரசியல்வாதிகள் தமக்குள் உள்ள கட்சி பேதங்களை மறந்து தனிப்பட்ட நலனுக்கு அப்பால் தமக்கு தரப்பட்டுள்ள அமானிதத்தை தூரநோக்குடன் செயற்படுத்தி எமது சமூகத்தின் பொதுப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் என்பதை மஜ்லிஸ் ஷுரா வலியுறுத்துகிறது.

தேர்தல் காலங்களில் நாம் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளுமாறும் மற்ற சகோதரனின் மானம் தொடர்பில் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை தவறாது  கடைப்பிடிக்குமாறு  மஜ்லிஸ் ஷுரா அனைத்து மக்களையும் அரசியல்வாதிகளையும் விணயமாக கேட்டுக்கொள்கிறது. 

ஏ.எம். ஜுனைட்
பொதுச் செயலாளர்

1 comment:

  1. பட்டும் படாமலும் சும்மா பிரயொசனமில்லாத அறிக்கை விடுவதை தவிருங்கள்.

    மதத்தின் பெயரில் இயங்கும் நீங்கள் உங்கள் சமுகத்தின் நலனுக்காக உங்கள் மதத்தின் எடுகோலை மக்களுக்கு விளங்கப்படுத்தலாமே?

    அதனூடாக நசுக்கப்பட்ட உங்கள் மக்களுக்காக உங்கள் மததிற்காக தீர்வை பெற்றுக்கொள்ள யாருக்கு வாக்களிக்கவேண்டும் என வெளிப்படையாக சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?இது உங்களது மதத்தை பொருத்தவரைக்கும் உங்கள் மீதான கடமையும்கூட?

    பெருவலை மக்கள் ரோசம்கெட்டவர்களா அல்லது மொத்த முஸ்லிம்களும் இப்படியா? ஏனெனில் யாரின் ஆட்ச்சியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களோ உடமைகளை இழந்தார்களோ,இனக்கலவரத்த்ற்கு உள்ளானார்களோ(மகிந்த) அவருக்கே மீண்டும் தங்களது ஆதரவினை வழங்கும் வீடியோவை முகனூலில் கண்டோம்?

    நான் பொதுபல சேனாவை தடை செய்ய மாட்டேன் என ஜனாதிபதி அடம்பிடித்த செய்தியானது இன்னுமும் ஜப்னா முஸ்லிமில் வலது புறத்தில் உள்ளது பார்க்கவில்லையா சகோதரா?

    ReplyDelete

Powered by Blogger.