விவசாயியின் மகன் என கூறிக்கொள்ளும் மைத்திரி, விவசாயிகளை மறந்துவிட்டார் - மஹிந்த
மற்றையவரின் கொள்கை பிரகடனங்களின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு முறையான கொள்கை மற்றும் திட்டம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
பதுளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
பொது வேட்பாளரின் கொள்கை பிரகடனத்தில் விவசாயிகளை மறந்துள்ளார். ஆனால், விவசாயியின் புதல்வர் என்று கூறிக்கொள்கிறார்.
தாம் விவசாயிகளுக்கு வழங்கிய நிவாரணங்களின் பட்டியல்தான் அவர்களிடம் இருக்கிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, வியலுவ, ஹாலிஎல, வெலிமடை, ஊவ பரணகம ஆகிய பிரதேசங்களுக்கு ஜனாதிபதி இன்று விஜயம் செய்துள்ளார்.
you forgot majority and minority but only you remember your family ,China and Russia.
ReplyDelete