'மஹிந்த வெற்றிபெறுவார்' என்ற 'வன் டெக்ஸ்ட்' அமைப்பின் விளக்கம்
''மஹிந்த வெற்றியடைவார் - ஆய்வில் தகவல், முஸ்லிம் வாக்கு 64 வீதம் மைத்திரிக்கு, 35 வீதம் மஹிந்தவுக்கு'' என்ற தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
(இந்த தகவலை ஜப்னா முஸ்லிம் இணையம் ஐரோப்பாவில் இயங்கும் மற்றுமொரு இணையத்திடமிருந்து பெற்றிருந்தது)
இதுதொடர்பில் மேலும் விபரங்களை அறிவதற்காக இலங்கையில் செயற்படும் 'வன் டெக்ஸ்ட்' நிறுவனத்திற்கு
One-Text Initiative (OTI)
28, Anderson Road
Off Dickmon’s Road
Colombo 00500
T: +94 115343832/3/6
ஜப்னா முஸ்லிம் இணையம் தொலைபேசி அழைப்பெடுத்தது.
இதன்போது பதில் வழங்கிய நிறுவனத்தின் பிரதான இணைப்பாளார் நிமால், தாம் இவ்வாறான ஆய்வை மேற்கொள்ளவில்லையெனவும், எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லையெனவும், தமது நிறுவனத்தின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், இதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
பிற்குறிப்பு - குறித்த நிறுவனம் தமது பெயரில் , தாம் அந்த ஆய்வை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள நிலையில், ஜப்னா முஸ்லிம் இணையமானது ''மஹிந்த வெற்றியடைவார் - ஆய்வில் தகவல், முஸ்லிம் வாக்கு 64 வீதம் மைத்திரிக்கு, 35 வீதம் மஹிந்தவுக்கு'' என்ற செய்தியை உடனடியாக நீக்கிவிடுகிறது.
this is serious mistake,
ReplyDeleteஜப்னா முஸ்லிம் ஒரு சிறந்த ஊடகத்தின் பொறுப்பான நன்னடத்தையை இங்கே வெளிப்படுத்தி இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
ReplyDelete