Header Ads



ஹெல உறுமயவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தினார் மைத்திரிபால (படங்கள் இணைப்பு)


ஜாதிக ஹெல உறுமய கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வமாக இன்று 02-12-2014 இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக கட்சியின் பொது செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்படும். நல்லாட்சி குறித்த யோசனை திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போது அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் யோசனை திட்டங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் பதிலளித்தது. இந்த பதில் எமது கட்சியை திருப்தியடைய செய்யவில்லை. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் புறம்பான ஓர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது.

தேசிய ஐக்கிய அரசாங்கமொன்று தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அங்கம் வகிக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும் நல்லாட்சி ஜனநாயகம் ஆகியனவற்றை நிலைநாட்ட மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்க வேண்டுமென சம்பிக்க ரணவக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.