இந்த நாடு நாசம் பண்ணப்பட்டுள்ளது - பறகஹதெனியாவில் மைத்திரிபால
(இக்பால் அலி)
இந்த நாட்டில் கடின அரசியல் பிடியிலிருந்து ஜனநாயகத்துக்காக போராடி சுதந்திரமான நீதியானதுமான சாதாரண தேர்தலை நடத்தி ஜனவரி 8 ஆம் திகதி புதிய அரசாங்கம் அமைப்போம் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாவத்தகம தேர்தல் தொகுதியில் பறகஹதெனிய சந்தியில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரி சிறி சேனவை ஆதரித்து மாவத்தகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஜே. சீ. அலவத்துவெல தலைமையில் 19-12-2014 நடைபெற்றது. அதில் கலந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த சுதந்திரத்திதைப் பெற்றுக் கொடுக்கப்பட்டது அத்துடன் 2009 மே 18 ஆம் திகதி உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பிரபாகரன் உயிரந்த கடைசி தினம். இந்த தினம் கட்சி, நிறம் இனம் வேறுபாடுகளின்றி எங்கள் மாராசன் என்று எல்லோரும் வீதியில் இறங்கி தேசியக் கொடியை போற்றினர். இலங்கையில் பல்வேறு தரப்பட்ட அரசர்கள் இருந்துள்ளனர்.
இந்த நாட்டில் அரசன் ஆட்சி இல்லை. சதந்தரம் அடைந்த எமது நாட்டில் மக்களாட்சியே உள்ளன. 2010 ஆம் ஆண்டிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ புதிய பயணம் செல்ல ஆரம்பித்தார். அவரது அமைச்சர்களை ஒதுக்கி வைக்கமுற்பட்டார். கட்சிகளை சின்னாபின்னமாக்கினார். இந்த நாட்டு புத்திஜீவிகளை படித்த மனிதர்களை கவனத்தில் கொள்ள வில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறந்து விட்டார். பண்டாரநாயக்கவின் தன்மை மறந்து விட்டது. மஹிந்த ராஜபக்ஷ உங்களை மறந்து புதிய பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
அந்தப் புதிய பயணம் இந்த நாட்லுள்ள ஜனநாயகத்தை இல்லாமல் செய்த பயணம் கட்சிகளை நாசம் பண்ணிய பயணம். இந்த நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களை கவனத்தில் கொள்ளாத பயணம். அரச சேவையாளர்களுடைய குறை நிறைகளை அறிந்து கொள்ள முடியாமற் செய்த பயணம். அது தனிப் வழிப் பயணம். அது ஹிட்லர் போன்ற பயணம். முதலாம் வழங்கினோம். இரண்டாவது வழங்கினோம். மூன்றாவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு தனி வழிப்பாதையில் செல்வதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.
இந்த நாடு ஊழல் நிறைந்தது. இந்த நாடு நாசம் பண்ணப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களுடைய வளங்களை சூறை ஆரம்பித்தார். இந்த நாட்டில் நீதி நியாயம் என்பது இல்லை. அதை இல்லாமல் செய்தார். பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. உயர் நீதியரசர் ஸ்ரீயாணி பண்டாரநாயக்கவுக்கு பொய் குற்றச் சாட்டை வைத்து அவரை பதவியிலிருந்து நீக்கனார். இந்த நாட்டில் நீதி வீழ்ச்சி கண்டுள்ளது என்பது மட்டுமல்ல ஸ்ரீயாணி பண்டாரநாயக என்பவர் ஒரு தாய். ஒரு பெண் சமூகத்திற்கு மானம் கௌரவம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஊழல் மோசடி, சூது மேன்மை அடைந்துள்ளது. இந்த நாட்டில் அபிவிருத்திக்காகப் பயன்படும் பணங்களில் மூன்றில் இரண்டு பங்கு தங்களுடைய பைகளில் நிரப்புகின்றனர்.
இங்கே வரும் போது பாதைகள், பாலங்கள் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. ஆனாலும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் பெறுமதி எவ்வளவு என உங்களுக்கு சொல்ல முடியுமா, இதில் பெரும் தொகையான பணத்தை அவர்கள் எடுக்கின்றனர். ஒவ்வொரு கிராமங்களிலும் நிதி ஒதுக்கீடு செய்து அதன் சரியான மதிப்பீட்டை பொது மக்களுக்கு காட்டுங்கள். இலங்கை அரச வங்கிகள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன இதுபோல் இலங்கை பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment